உள்ளூர் செய்திகள்

என்.எஸ்.எஸ்., முகாம்

உத்திரமேரூர் : உத்திரமேரூரில் உள்ள மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் முகாம் நடத்தி வருகின்றனர்.நேற்று, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேடபாளையம் பகுதியில், பள்ளி வளாகம், கோவில் பகுதி மற்றும் கிராமத்தின் பொது இடங்களில் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் தனசேகரன் தலைமையில் நடந்த இம்முகாமில், பிளாஸ்டிக் ஒழிப்பு, மது ஒழிப்பு, குடிநீர் மேலாண்மை, சுற்றுப்புற சுகாதாரம் போன்றவை குறித்து கலை நிகழ்ச்சி வாயிலாக மாணவ - மாணவியர், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை