உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உடல் உறுப்பு தானம் இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை

உடல் உறுப்பு தானம் இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் கோபி, 22. சினிமா உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கிளார் கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, கோபி காயமடைந்தார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இளைஞரின் உடல் சொந்த ஊரான கிளாருக்கு கொண்டு வரப்பட்டது. அரசு சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் நேற்று காலை அஞ்சலி செலுத்தினார். மேலும், தி.மு.க., - -எம்.பி., செல்வம், -எம்.எல்.ஏ., எழிலரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை