உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெருநகரில் மாட்டுச்சந்தை நடத்த ஊராட்சி நிர்வாகம் முடிவு

பெருநகரில் மாட்டுச்சந்தை நடத்த ஊராட்சி நிர்வாகம் முடிவு

உத்திரமேரூர்:-பெருநகரில் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாட்டுச்சந்தை நடத்த ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாய தொழிலுடன், மாடு வளர்ப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் காளை மற்றும் பசு மாடுகளை வளர்த்து, அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். பெருநகர் கிராமத்தில் மாட்டுச்சந்தை இல்லாமல் உள்ளது. இதனால், பெருநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தோர், மாடுகளை வாங்கவும் விற்கவும் வந்தவாசி, செய்யாறு, ஆரணி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அப்போது, விவசாயிகளுக்கு நேர விரயமும், அதிக பணமும் செலவாகிறது. எனவே, பெருநகரில் மாட்டுச்சந்தை அமைக்க, விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, விவசாயிகளின் நலன் கருதி பெருநகரில் மாட்டுச்சந்தை அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பெருநகர் காவல் நிலையம் எதிரே உள்ள வாரச்சந்தை இடத்தில், மாட்டுச்சந்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாட்டுச்சந்தை துவங்க உள்ளதற்கான பேனர்கள், பெருநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பெருநகர் ஊராட்சி தலைவர் மங்கள கவுரி கூறியதாவது: மாட்டுச்சந்தை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சந்தை துவக்க உள்ள தகவலை சுற்றுவட்டார கிராமங்களில் தெரிவித்து வருகிறோம். வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில், சந்தை துவங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை