உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்காக பந்தல் அமைப்பு

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்காக பந்தல் அமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோவில் வெளி பிரகார தரையில் நடந்து செல்லும் பக்தர்களின் கால்கள் வெயிலில் சுடாமல் இருக்க, 'கூலிங் பெயிண்ட்' அடிக்கப்பட்டுள்ளது.மேலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் முடிந்து வெளிபிரகாரத்தை சுற்றி வந்தபின், தரையில் விழுந்து கும்பிடும் கோவில் கொடி மரம், தீபம் ஏற்றுமிடம், அன்னதானம் வழங்குமிடத்தில் பக்தர்கள் அதிகளவு கூடுவதால், அப்பகுதியில் பக்தர்களுக்கு நிழல் தரும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில், பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை