மேலும் செய்திகள்
யதோக்தகாரி கோவிலில் நாளை பிரம்மோத்சவம்
21-Mar-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான மார்ச் 24ம் தேதி காலை கருடசேவை உத்சவமும், இரவு ஹனுமந்த வாகன உத்சவமும் நடந்தது. ஏழாம் நாள் உத்சவமான மார்ச் 28 ம் தேதி காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ஒன்பதாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை ஆள்மேல் பல்லக்கும், தொடர்ந்து பொய்கையாழ்வார் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது.இதில், பிரம்மோத்சவம் நிறைவு நாளான நேற்று, மதியம் 2:00 மணிக்கு திருவாய்மொழி சாற்றுமறை நடந்தது. மாலை வெட்டிவேர் சப்பரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளி யதோத்காரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.கடந்த 10 நாட்களாக நடந்து வந்த பிரம்மோத்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாட்டை நல்லப்பா பாஷ்யகாரர் திருவம்சத்தார் பரம்பரை தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர்.
21-Mar-2025