| ADDED : ஜன 27, 2024 11:43 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், காந்தி சாலை, ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில், பயன்பாட்டில் இல்லாத தெரு மின்விளக்கு கம்பம் ஒன்று சாலையோரம் போடப்பட்டு உள்ளது.பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில், இரு மாதங்களுக்கு மேலாக கிடக்கும் மின்கம்பத்தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.மேலும், இச்சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள், மின்கம்பத்தில் தவறுதலாக இடித்துக் கொண்டு காயமடைகின்றனர்.எனவே, விபத்து ஏற்படும் வகையில் பயன்பாடின்றி போடப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.