உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்

 நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்

ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரி ஊராட்சியில் அதிகரித்துள்ள தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண் டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே பிரிந்து செல்லும் பெரிய தெரு சாலை, அப்பகுதியின் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், கிளினிக், மருந்தகம், சிறு வணிக கடைகள் என ஏராளமான வை உள் ளன. இந்நிலையில், இந்த சாலையில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவ்வப்போது, அவ்வழியாக வாகனத்தில் செல்வோரை துரத்தி வருகின்றன. அங்குள்ள, இறைச்சி கடைகளில் உணவு கிடைப்பதால், 10க்கும் மேற்பட்ட நாய்கள் எப்போது ம், கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிக்கின்றன. இதனால், காலை நேரங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், இரவு நேரங்ளில் மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகள் என, அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்கின்றன. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அதே போல், பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்களை நாய் துரத்திச் செல்வதால், மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் . எனவே, செரப்பனஞ்சேரியில் அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் தெருநா ய்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகேள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை