உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மக்களுடன் முதல்வர் திட்டம் ஆன்லைனில் மனுக்கள் பதிவேற்றம்

மக்களுடன் முதல்வர் திட்டம் ஆன்லைனில் மனுக்கள் பதிவேற்றம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம், உத்திரமேரூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.பேரூராட்சிகள் உதவி இயக்குனர் லதா தலைமையில் நடந்த முகாமில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர், மனைப்பட்டா, குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் என 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஆதிதிராவிட நலத்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தனர். இந்த கோரிக்கை மனுக்கள் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில், உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா, பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி