மேலும் செய்திகள்
நவரை பருவத்திற்கு உழவு பணி துவக்கம்
11 hour(s) ago
அய்யப்பன் கோவிலில் மலர் பூஜை
11 hour(s) ago
சத்துணவு கூடத்தை இடிக்க எம்.எல்.ஏ., பரிந்துரை
12 hour(s) ago
மின் ஒயர்கள் திருட்டால் விவசாயிகள் பாதிப்பு
12 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஒலிமுகமதுபேட்டை அருகில், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், சுற்றுலாத் துறை சார்பில், யாத்திரி நிவாஸ் என அழைக்கப்படும் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.அதன் அருகில், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணியரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு, 'பார்க்கிங்' அமைக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணியர் தங்களது கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை அங்கு 'பார்க்கிங்' செய்து வருகின்றனர்.இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், 'பார்க்கிங்' பகுதி குப்பை குவியலாக, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.வெளியூர் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை அங்கு பார்க்கிங் செய்வதோடு, அதே இடத்தில் உணவு சமைத்து சாப்பிடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, யாத்ரி நிவாஸ் வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் குவியலாக உள்ள குப்பையை முழுமையாக அகற்றி முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
11 hour(s) ago
11 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago