உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அண்ணனுக்கு கத்திக்குத்து பாசக்கார தம்பிக்கு காப்பு

அண்ணனுக்கு கத்திக்குத்து பாசக்கார தம்பிக்கு காப்பு

படப்பை:படப்பை அருகே அண்ணனை கத்தியால் குத்திய பாசக்கார தம்பியை போலீசார் கைது செய்தனர்.படப்பை அருகே வெள்ளேரிதாங்கல் பகுதியை சேர்ந்தவர் குமார், 45; மெக்கானிக். இவரது தம்பி ரமேஷ், 45; கூலி தொழிலாளி. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.அப்போது, ரமேஷ் தான் வைத்திருந்த கத்தியால் குமாரை குத்தி தப்பி சென்றார். காயமடைந்த குமார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த மணிமங்கலம் போலீசார், ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை