உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கார்த்திகை தீப திருவிழாவிற்கு வஸ்திரம் வழங்கல்

 கார்த்திகை தீப திருவிழாவிற்கு வஸ்திரம் வழங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, திருவண்ணாமலை கிரிவலக் குழுவினர், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 22வது ஆண்டாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வஸ்திர ங்களை வழங்கினர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு காஞ்சிபுரத்தில் உள்ள திருவண்ணாமலை கிரிவலக் குழு சார்பில், வஸ்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா டிச., 3ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு, காஞ்சிபுரத்தில் உள்ள திருவண்ணாமலை கிரிவலக் குழு சார்பில், 22வது ஆண்டாக, கிரிவலக் குழுவின் செயலர் கங்காதரதன் தலைமையில், அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்குமான வஸ்திரங்களை, கிரிவலக் குழுவினர், காஞ்சிபுரத்தில் இருந்து வஸ்திரங்கள் எடுத்துச் சென்று, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை