உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  விவசாயிகளுக்கு ரூ.8.லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

 விவசாயிகளுக்கு ரூ.8.லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங் கேற்றனர்.வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். தாமல் மற்றும் பள்ளூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 10 விவசாய பயனாளிகளுக்கு 8.20 லட்ச ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன்களும், 4 பயனாளிகளுக்கு 52,677 ரூபாய் மதிப்பிலான வேளாண் இடுப்பொருட்கள் என 8.73 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை