துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கல்
வாலாஜாபாத்:துாய்மை பராத இயக்கம் சார்பில், வாலாஜாபாத் ஒன்றிய துாய்மை காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 ஊராட்சிகளை சேர்ந்த 56 துாய்மை காவலர் மற்றும் 193 துப்புரவு பணியாளர்கள் 249 பேருக்கு கையுறை, காலணி முககவசம், ரெயின் கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மண்வெட்டி, குப்பை அள்ளும் உபகரணம் உள்ளிட்ட துப்புரவு கருவிகள் வழங்கப்பட்டன. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியார் பங்கேற்று உபகரண பொருட்களை வழங்கினர். வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமலா, தானுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.