உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரங்கசாமிகுளம் பஸ் நிறுத்தத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

ரங்கசாமிகுளம் பஸ் நிறுத்தத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை இருக்கை வசதி இல்லாமல், சிதிலமடைந்த நிலையில் இருந்தது. எனவே, நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி.,செல்வம், லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நவீன பயணியர் நிழற்குடை அமைக்க 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.இதைத் தொடர்ந்து, நவீன பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், இருக்கை வசதி, 'சிசிடிவி' கேமரா, மூன்று மின்விசிறிகள், மொபைல் போன் சார்ஜ் செய்ய 10 'பிளக் பாய்ன்டு'கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.மேலும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள நிழற்குடையில் தினசரி நாளிதழ்களும், பயணியரின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனும் தினமும் வைக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் தரப்பினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை