மேலும் செய்திகள்
சித்தாத்துாரில் கைப்பந்து போட்டி
5 minutes ago
அனுபவமே சிறந்த ஆசான் வசந்த வாசல் நிகழ்ச்சி
6 minutes ago
நெசவாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்
6 minutes ago
சம்பா பருவ பாசனத்திற்கு தென்னேரியில் தண்ணீர் திறப்பு
8 minutes ago
உத்திரமேரூர்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, உத்திரமேரூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இருந்த, பட்டுப்போன மரம் வெட்டி அகற்றப்பட்டது. உத்திரமேரூரில், காஞ்சிபுரம் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கால்நடைகளுக்கு சினை ஊசி செலுத்துதல், ஆடு மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த மருத்துவமனை வளாகத்தில், 30 ஆண்டுக்கு முன், பசுமை சூழலை ஏற்படுத்த பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.தற்போது, மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து, அதன் ஆயுட்காலத்தையும் தாண்டிய நிலையில் உள்ளன. அதில், மருத்துவமனை வளாக நுழைவாயில் அருகே இருந்த, அசோக மரம் ஒன்று, முற்றிலும் பட்டு போய் காய்ந்த நிலையில் இருந்தது. இந்த காய்ந்த மரம் எந்நேரத்திலும் விழும் என்கிற அச்சத்தோடு, தினமும் வந்து சென்றனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை அடுத்து, உத்திரமேரூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இருந்த, பட்டுப்போன அசோக மரம் நேற்று, வெட்டி அகற்றப்பட்டது.
5 minutes ago
6 minutes ago
6 minutes ago
8 minutes ago