மேலும் செய்திகள்
செவிலிமேடு பாலத்தில் நடைபாதை சீரமைப்பு
02-Dec-2024
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் இருந்து ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் புறவழி சாலையான, மிலிட்டரி சாலை உள்ளது. இச்சாலையில், விஷ்ணு நகரில் வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் உள்ளது.புறவழி சாலையில், புதிதாக கட்டப்பட்ட இப்பாலம் வழியாக, வாலாஜாபாத்தில் இருந்து, உத்திரமேரூர், வந்தவாசி, செய்யாறு, பெங்களூரூ, வேலுார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் டூ- வீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து நிறைந்த இப்பாலத்தில் தெரு மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இரவு நேரத்தில் பாலம் அமைந்துள்ள பகுதியில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு நகரில், வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில், தெரு மின்விளக்கு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
02-Dec-2024