உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எல்லையம்மன் கோவிலில் தேர் திருவிழா விமரிசை

எல்லையம்மன் கோவிலில் தேர் திருவிழா விமரிசை

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அடுத்த, மருதம் கிராமத்தில், எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா நடைபெறும்.நடப்பாண்டிற்கான விழா, கடந்த 31ம் தேதியன்று கொடியேற்றுதலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன்தினம் பெண்கள் ஊரணி பொங்கலிட்டு, அம்மனுக்கு படையலிட்டனர்.நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, எல்லையம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முக்கிய வீதிகளின் வழியாக, தேர் இழுத்து செல்லப்பட்டது. இதில், மருதம், திருப்புலிவனம், வாடாதவூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை