உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பினாயூரில் நெற்களம் அமைப்பு

 பினாயூரில் நெற்களம் அமைப்பு

உத்திரமேரூர்: பினாயூரில், 9.21 லட்சம் ரூபாயில் புதிய நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் ஊராட்சியில், 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஒவ்வொரு நெல் அறுவடை பருவத்தின்போது அப்பகுதி விவசாயிகள், நெல்லை உலர்த்த போதிய நெற்கள வசதி இல்லாமல் இருந்தனர். இதனால், விவசாயிகள் நெல்லை உலர்த்த, கூடுதலாக நெற்கள வசதி ஏற்படுத்த, ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், கனிம வள திட்டத்தின் கீழ், 9.21 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, நெற்களம் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. கூடுதலாக நெற்களம் அமைக்கப்பட்டுள்ளதால் பினாயூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ