உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கால்வாயில் கொட்டப்படும் கழிவுநீரால் தொற்று அபாயம்

 கால்வாயில் கொட்டப்படும் கழிவுநீரால் தொற்று அபாயம்

படப்பை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, வீடு மற்றும் கடைகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீர், வஞ்சுவாஞ்சேரி அருகே மழைநீர் கால்வாயில் இரவு நேரங்களில் கொட்டப்படுகிறது. கால்வாயில் தேங்கும் கழிவுநீரால், கடும் துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல, மழை பொழியும் போது, மழைநீருடன் கழிவுநீர் கலந்து, சாலையில் வழிந்து, அருகே உள்ள ஆத்தனஞ்சேரி ஏரியில் கலந்து மாசடைகிறது. எனவே, சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில், கழிவுநீர் கொட்டும் டேங்கர் லாரிகளை கண்காணித்து, படப்பை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மா. புஷ்பராஜ், வஞ்சுவாஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை