காஞ்சியில் இன்று தேரோட்டம் சேதமான சாலை சீரமைப்பு
காஞ்சிபுரம், மே 17--காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.இதில், ஏழாம் நாள் உத்சவமான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. இதையொட்டி தேரோட்டம் தடையின்றி நடக்கும் வகையில், தேரோடும் வீதிகளில், சாலையோரத்தில் மின்தட பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை மின்வாரியத்தினர் அகற்றினர்.இந்நிலையில், தேர் பவனி வரும், காந்தி சாலை, காமராஜர் வீதி, நான்கு ராஜ வீதிகளிலும் சாலை சேதமடைந்த பகுதியில், நெடுஞ்சாலைத் துறையினர், ரெடிமேட் தார்கலவை வாயிலாக சாலையை சீரமைத்தனர்.