உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மதுார் மயானத்திற்கு பாதை வசதி நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்

மதுார் மயானத்திற்கு பாதை வசதி நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் கிராம காலனி பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதிக்கான மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், இறந்தவர்களை அடக்கம் செய்ய, விவசாய நிலங்கள் வழியாக மயானத்திற்கு செல்லும் நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது.மயானம் செல்ல பாதை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் சேற்றிலும், சகதியிலும், சாகுபடி செய்துள்ள பயிர்களை மிதித்த படியாகவும், செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து இருந்து வந்தது.இதுகுறித்து, மதுார் ஊராட்சி மன்ற கூட்டங்களில் தொடர்ந்து தீர்மானங்கள் போடப்பட்டன. கிராமத்தினர் சார்பில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களும் அளிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில், மதுார் காலனி மயானத்திற்கு பாதை வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க மாநில நிதி குழு மானியத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான பணி, சில நாட்களுக்கு முன் துவங்கி, தற்போது நிறைவு பெற்றுள்ளது. பல ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து உள்ளதாக மதுார் காலனியினர் திருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி