உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சின்னையன்சத்திரம் பகுதியில் காத்திருக்கும் சாலை ஓர ஆபத்து

சின்னையன்சத்திரம் பகுதியில் காத்திருக்கும் சாலை ஓர ஆபத்து

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சின்னையன்சத்திரம் வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழி நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது, ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி மற்றும் பிரதான கடவுப்பாதைகளின் நடுவே, மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.சின்னையன்சத்திரத்தில் இருந்து, ஆரியம்பாக்கம் மார்க்கமாக இருக்கும் சாலை ஓரம், மழைநீர் வடிகால்வாய் மீது போடப்பட்ட சிமென்ட் கான்கிரீட் கால்வாயிலேயே விழுந்துள்ளது.இதனால், வேலுார், காஞ்சிபுரம் ஆகிய மார்க்கங்களில் இருந்து, சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சேதமடைந்த மழைநீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.எனவே, சின்னையன்சத்திரம் அருகே, சாலை ஓர மழைநீர் கால்வாய் மீது, முறையாக தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இடைவெளி விட்ட இடத்தில் சிமென்ட் பலகை போடப்பட்டுள்ளன. ஓரிரு சிமென்ட் பலகை விழுந்திருக்கும். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்