| ADDED : நவ 22, 2025 01:08 AM
வாலாஜாபாத்: வாலாஜா பாத் சாலை ஓரத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். வாலாஜாபாதில் இருந்து, காஞ்சிபுரம் செல்லும் சாலையில், வாலாஜாபாத் பாலாற்றங்கரையொட்டி டாஸ்மாக் கடை இயங்குகிறது. இந்த கடை அருகாமையில் துரித உணவகம் செயல்படுகிறது. இதனால், டாஸ்மாக் கடை மட்டுமின்றி உ ணவகத்திற்கும் ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் சாலையின் இருபுறத்தையும் கடந்து செல்வதில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது: தற் போது இயங்கும் டாஸ்மாக் கடை எதிரே கடந்த ஆண்டுகளில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டது. விபத்துகள் அதிகம் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை பேரில், ஒரு கடை அகற்றப்பட்டது. தற்போது இயங்கும் டாஸ்மாக் கடையால், இச்சாலை பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலையோர டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.