உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கதவு எண் ஸ்டிக்கர் ஒட்ட ரூ.50 வசூல் செரப்பனஞ்சேரி ஊராட்சியில் அடாவடி

கதவு எண் ஸ்டிக்கர் ஒட்ட ரூ.50 வசூல் செரப்பனஞ்சேரி ஊராட்சியில் அடாவடி

ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள்உள்ளன. ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியங்களில் ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார்,பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் சிப்காட் தொழில் பூங்காக்களில் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் புதியகுடியிருப்புகள் அதிகரித்துவருகின்றன.புதிதாக உருவாகிய பல வீடுகளில் கதவு எண் எழுதப்படாமல் உள்ளன. இதனால், அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போதும், பிற தேவைகளின் போதும் கதவு எண் தெரியாமல் குழம்புகின்றனர் என்ற சர்ச்சை இருந்து வந்தது.இந்த நிலையில், குன்றத்துார் ஒன்றியம் செரப்பனஞ்சேரி ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு புதிய கதவு எண் விபரம் அடங்கிய ஸ்டிக்கர் பதிக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அவ்வாறு, ஸ்டிக்கர் பதிக்க வரும் ஊழியர்கள், வீட்டின் உரிமையாளர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:செரப்பனஞ்சேரி ஊராட்சியில், 2000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இரு நாட்களுக்கு முன், ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு புதிய கதவு எண் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.அதற்காக, வீட்டின் உரிமையளார்களிடம், தலா 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதற்கான ரசீதுகளை கேட்டபோது, 'ரசீது இல்லை' எனக் கூறியுள்ளனர். மேலும், பணம் அளிக்க மறுத்தவர்களின் வீட்டிற்கு கதவு எண்ஸ்டிகரை ஒட்டாமல்சென்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளவீடுகளுக்கு புதிய கதவு எண் அளிக்கப் படுகிறது. ஆனால், இதற்காக வீட்டின்உரிமையாளர்களிடம் எந்தவித தொகையும் வசூல் செய்யப்படுவது நடைமுறையில் இல்லை.வட்டார வளர்ச்சி அதிகாரி,குன்றத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை