உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தீபத்திற்கு அகல் விளக்குகள் மழையால் விற்பனை மந்தம்

 தீபத்திற்கு அகல் விளக்குகள் மழையால் விற்பனை மந்தம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சில நாட்களாக பெய்து வரும், தொடர் மழையால் அகல் விளக்கு வியாபாரம் மந்தமாக உள்ளது என, வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், கோவில் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களில் அகல் விளக்கில் தீபமேற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் நகரில் ரயில்வே சாலை, கலெக்ட்ரேட், காமராஜர் வீதி, ராஜாஜி மார்க்கெட், ஜவஹர்லால் நேரு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், மண்பாண்ட வியாபாரிகள் அகல் விளக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், டிட்வா' புயல் காரணமாக, சில நாட்களாக காஞ்சிபுரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், அகல் விளக்கு வியாபாரம் மந்தமாக உள்ளது என, மண்பாண்ட வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மண்பாண்ட வியாபாரி கார்த்திகேயன் கூறியதாவது: மண் அகல் விளக்கு 6 எண்ணிக்கை 10 ரூபாய்க்கும், செராமிக் சிறிய அகல் விளக்கு ஒன்று, ஒரு ரூபாய்க்கும்,மீடி யம் சைஸ் 6 எண்ணிக்கை 10 ரூபாய்க்கும், பெரிய விளக்கு ஒன்று, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். செராமிக் விளக்கைவிட, பொதுமக்கள் பாரம்பரியமான மண் அகல் விளக்கை விரும்பி வாங்கி செல்கின்றனர். இருப்பினும், காஞ்சிபுரத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அகல் விளக்கு விற்பனை மந்தமாக உள்ளது. மழை துவங்குவதற்கு முன் ஒரு நாளைக்கு 5,000 - 6,00-0 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது மழை பெய்வதால், ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ