மேலும் செய்திகள்
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
13 minutes ago
வாலாஜாபாத் கிளை நுாலகம் முழு நாள் செயல்பட எதிர்பார்ப்பு
14 minutes ago
இலவசமாக மனு எழுதி தர ஆட்கள் நியமிக்க கோரிக்கை
15 minutes ago
ஸ்ரீபெரும்புதுார்: மொளச்சூர் ஊராட்சியில், கால்வாயில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பையால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர், சாலையில் வழிந்து வருவதால், அப்பகுதியில் துர்நாற்றும் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குப்பை ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மொளச்சூர், திருமங்கலம் ஆகிய ஊராட்சிகளின் எல்லையாக இந்த பகுதி உள்ளது. திருமங்கலம் மற்றும் மொளச்சூர் ஊராட்சியினர் இந்த தெரு வழியே, சுங்குவார்சத்திரம் பஜார், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு சென்று வருகின்றனர். அதேபோல, சுங்குவார்சத்திரம் சார் - பதிவாளர் அலுவலகம், மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் மற்றும் உணவு கழிவு களை, பள்ளத்தெரு சாலையோரம் மற்றும் அருகே உள்ள கால்வாயில் வீசுகின்றனர். இதனால், பிளாஸ்டிக் குப்பை கால்வாய் முழுதும் அடைத்து உள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக வடிந்து செல்லாமல் கால்வாயில் தேங்குவதுடன், கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்து வருகிறது. துர்நாற்றம் இதனால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக, நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, கால்வாயில் அடைத்துள்ள பிளாஸ்டிக் குப்பையை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
13 minutes ago
14 minutes ago
15 minutes ago