உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளி ரதம் உற்சவம் விமரிசை

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளி ரதம் உற்சவம் விமரிசை

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தையொட்டி, தினமும், காலை, மாலையில் காமாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.இதில், ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை ஆள்மேல் பல்லக்கு உற்சவம் நடந்தது. இரவு, வெள்ளி ரதம் உற்சவம் விமரிசையாக நடந்தது.இதில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில், இரவு 9:15 மணிக்கு காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், பல்வேறு பூஜைகளுக்கு பின், 9:32 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் புறப்பட்டது. நான்கு ராஜ வீதிகளிலும் தேர் பவனி வந்தது.நாளை, காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை