உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கொடி நாள் வசூலிக்க குறுஞ்செய்தி

கொடி நாள் வசூலிக்க குறுஞ்செய்தி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. மது மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு என, ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கிய தெற்கு மண்டலம், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் படை வீரர் கொடிநாள் வசூலாக, ஒவ்வொரு கடைக்கும், 2,000 ரூபாய் அலுவலகத்தில் வழங்கி, சலான் பெற்று செல்லலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை