உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மானாம்பதி கண்டிகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

 மானாம்பதி கண்டிகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

உத்திரமேரூர்: மானாம்பதி கண்டிகையில், பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மானாம்பதி கண்டிகையில், 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அதேபோல, சுற்றுவட்டார கிராமத்தினரும் இங்கு வந்து பேருந்து பிடித்து செல்கின்றனர். இதனால், மானாம்பதி கண்டிகையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, இப்பகுதியில் குற்றச்சம்பவங்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் வாகனங்கள், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிய, கிராமத்தினர் கண்காணிப்பு கேமராவை பொருத்த முடிவு செய்தனர். அதன்படி, தனி நபர் ஒருவரின் நிதி உதவித்தொகையில், மானாம்பதி பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல, கிராமத்தின் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை