உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் தண்டலம் ஊராட்சி குட்டை

ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் தண்டலம் ஊராட்சி குட்டை

இருங்காட்டுக்கோட்டை:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் தண்டலம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் ஊராட்சி அலுவலகம் அருகே குட்டை உள்ளது. இந்த குட்டை அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.மேலும், இந்த குட்டை அருகே சில சமுதாய மக்கள் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணிக்காக குளத்தின் பெரும் பகுதி மூடப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள குட்டையை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:சாலை விரிவாக்கத்தால் குளத்தின் பெரும் பகுதி மூடப்பட்டுவிட்டன. இதனால் குட்டை மிகவும் சிறிய அளவில் காட்சியளிக்கிறது. மேலும், அந்த பகுதியைச் சேர்ந்த தனிநபர் சிலர், தங்களது நிலத்திற்கு செல்வதற்கு வழி ஏற்படுத்தும் முயற்சியில், குளத்தை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஊராட்சி நிர்வாகமும் உடந்தையாக உள்ளது. வருவாய் துறையினர் மூலம் இந்த குட்டையை அளவீடு செய்து, எஞ்சியுள்ள குட்டையை பாதுக்காக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை