உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமான சாலையில் மழைநீர் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்

சேதமான சாலையில் மழைநீர் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி சாலை வழியாக நாகலுாத்துமேடு, டெம்பிள்சிட்டி, சதாவரம், தும்பவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ- - மாணவியரும் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், குமார் தெரு சந்திப்பில், மண் அரிப்பு ஏற்பட்டு, ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், லேசான மழைக்கே சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் குளம்போல தேங்குகிறது.இதனால், பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். பாதசாரிகளும் மழைநீரில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.எனவே, வேகவதி நதி சாலையுடன், குமார் சாலை இணையும் பகுதியில், சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ