உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காவிதண்டலம் சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

 காவிதண்டலம் சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

காவிதண்டலம்: காவிதண்டலத்தில் மூன்று சாலை சந்திப்பு பகுதிகளிலும், வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டையில் இருந்து, காவிதண்டலம் வழியாக களியப்பேட்டைக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலை பகுதியில், விச்சூர் கிராமத்தின் வழியாக திருவானைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றடையும் மற்றொரு சாலை உள்ளது. மூன்று கிராமங்களை இணைக்கும் இந்த கூட்டுச்சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. களியப்பேட்டையை சுற்றி உள்ள ராஜம்பேட்டை, கரும்பாக்கம், மிளகர்மேனி, சீட்டணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் மற்றும் விச்சூர் அடுத்த திருவானைக்கோவில், மாம்பாக்கம் போன்ற பகுதியினரும் இருசக்கர வாகனம் மூலம், இச்சாலை வழியாக, செங்கல்பட்டு சென்று வருகின்றனர். அதிக போக்குவரத்து உள்ள இச்சாலையில், வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். இதனால், மூன்று கிராமங்களுக்கான கூட்டுச்சாலை அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இக்கூட்டுச்சாலை அருகே, மூன்று பகுதிகளிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ