மேலும் செய்திகள்
விவசாயிகள் தின விழா
8 minutes ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
19 minutes ago
வாலாஜாபாத் கிளை நுாலகம் முழு நாள் செயல்பட எதிர்பார்ப்பு
20 minutes ago
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி கிராம சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்வாரியத்தினர், சீரமைக்காததால், மின் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. உத்திரமேரூர் - செங்கல் பட்டு சாலை, பெருங்கோழி கிராம சாலையோரம் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு சீரான மின்சாரம் வழங்கும் வகையில், மின் மாற்றிக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின்தட பாதை செல்கிறது. இந்நிலையில், கடந்த மாதம், பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, சாலையோரம் ஒரு கம்பம் சாய்ந்து விழும் நிலை உள்ளது. இதனால், மின்கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், விவசாய நிலத்திற்கு செல்லும் விவசாயிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகள் மின்ஒயரில் சிக்கி இறக்கும் நிலை உள்ளது. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் பெருங்கோழி கிராமத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க உத்திரமேரூர் மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
8 minutes ago
19 minutes ago
20 minutes ago