உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அகத்தியா மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா 

 அகத்தியா மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா 

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,பாரம்பரிய உணவு திருவிழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு, அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலர் சாந்தி தலைமை வகித்தார். துரித உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நஞ்சில்லாத உணவு, பாரம்பரிய ரக அரிசி, சிறுதானியங்களின் நன்மைகள் எடுத்துரைக்கப்பட்டன. குறிப்பாக, மண் பாண்ட சமையல், சிறு தானியங்களில் மதிப்புகூட்டிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு, காய்கறி, கீரைகுறித்து கண்காட்சி அமைக்கப்பட்டன. அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அஜய்குமார், முதல்வர் சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை