உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கருநிலத்தில் வழிப்பறி செய்த இருவர் கைது

கருநிலத்தில் வழிப்பறி செய்த இருவர் கைது

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் ஊராட்சி, பிரேமாவதி நகரைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 32. கடந்த 4ம் தேதி, தாம்பரத்தில் இருந்து கருநிலம் நோக்கி, 'ஹோண்டா ஆக்டிவா' இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.கருநிலம் அருகில் சென்ற போது, பின்னால் 'டியோ' இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், வெண்ணிலாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 12 சவரன் தங்க நகைகளை பறித்து தப்பினர்.இது குறித்து, வெண்ணிலா அளித்த புகாரின்படி, மறைமலை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட சிங்கபெருமாள் கோவில் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார், 30, பரனுார் பகுதியை சேர்ந்த ராஜேஷ், 29, என தெரிய வந்தது.இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் திருடப்பட்ட நகை குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை