உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்சாரம் பாய்ந்து இருவர் படுகாயம்

மின்சாரம் பாய்ந்து இருவர் படுகாயம்

குன்றத்துார் : மாங்காடு நகராட்சி, பாலாஜி அம்பாள் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது வீட்டின் மாடியில் கட்டுமான பணி நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று, மனோகரன் மகன் விக்னேஷ், 30, கட்டுமான பணியாளர் ஒருவர் இணைந்து வீட்டின் மாடியில் திருஷ்டி பொம்மை வைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.அப்போது, கம்பியில் திருஷ்டி பொம்மை கட்டி அதை வீட்டின் மாடியில் பொருத்தியபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மேலே சென்ற உயர் அழுத்த மின் ஒயரில் கம்பி உரசியது.இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து கருகிய நிலையில் தரையில் விழுந்தனர்.இதைப் பார்த்த அப்பகுதியினர், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை