மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
21 hour(s) ago
விவசாயிகள் தின விழா
21 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
21 hour(s) ago
குருவிமலை:காஞ்சிபுரம் ஒன்றியம், குருவிமலை, பள்ளிக்கூட தெருவில், 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறி இருந்தது.மழைகாலத்தில் இச்சாலை சகதியாக மாறியதால், சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தினர்.இதை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், கனிமவள நிதியில் இருந்து, 28.85 லட்சம் ரூபாய் செலவில் சமீபத்தில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இச்சாலையில் அரசு பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளதால், ஐந்து இடங்களில் வெள்ளை வர்ணம் பூசாமல் வேகத்தடை மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.இதனால், சிறிய சக்கரம் கொண்ட இருசக்கர வாகனங்கள், வேகத்தடையை கடக்கும்போது, வாகனத்தின் அடிப்பகுதி தரையில் உரசுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். மேலும், வாகனமும் பழுதடையும் சூழல் உள்ளது.எனவே, வேகத்தடையின் உயரத்தை குறைத்து, வெள்ளை நிற வர்ணமும், இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago