உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ -- வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ -- வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த, காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 35; இவர், 'ராயல் என்பீல்ட்' இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம், இரவு 8:30 மணிக்கு, வாலாஜாபாதில் இருந்து, காவாந்தண்டலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.தம்மனுார் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், நிலை தடுமாறி விழுந்ததில், படுகாயமடைந் ஸ்ரீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது, பரிசோதனை செய்த மருத்துவர், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக, அவரது மனைவி சரஸ்வதி, மாகரல் போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை