உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுற்றுசுவர் வசதி இல்லாத உள்ளாவூர் அரசு பள்ளி

சுற்றுசுவர் வசதி இல்லாத உள்ளாவூர் அரசு பள்ளி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது உள்ளாவூர் கிராமம். இப்பகுதியில் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளி வளாகத்திற்கு இதுவரை சுற்றுசுவர் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், மாணவ, மாணவியர் விளையாட்டு நேரங்களில், பள்ளி வளாகத்தையொட்டி உள்ள சாலையை பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும், பள்ளி விடுமுறை மற்றும் இரவு நேரங்களில், பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. பள்ளி வளாகத்தில் பராமரிக்க முயலும் மர கன்றுகள் போன்றவையும் சுற்றுசுவர் இல்லாததால், அப்பகுதி கால்நடைகளுக்கு இரையாகிறது. எனவே, உள்ளாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுசுவர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை