மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
5 hour(s) ago
குன்றத்துார்:மழையளவை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில், மாவட்டம் தோறும் தாலுகா அலுவலகத்தில் மழைமானி அமைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள குன்றத்துார் தாலுகாவில், வடக்கிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. குன்றத்துார் தாலுகா அலுவலகத்தில் மழைமானி இல்லை. இதனால், மழைக்காலங்களில் மழை அளவை துல்லியமாக அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. குன்றத்துார் தாலுகா அலுவலகம் சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. இங்கு, மழைமானி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குன்றத்துார் தாலுகா அலுவலகத்தில் மழைமானி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 'குன்றத்துார் அருகே கொளப்பாக்கம், சோமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைமானி விரைவில் அமைக்கப்பட உள்ளது' என்றார்.
5 hour(s) ago