உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சமூக விரோதிகள் நடமாட்டம் போலீசார் ரோந்து வருவரா?

சமூக விரோதிகள் நடமாட்டம் போலீசார் ரோந்து வருவரா?

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி ஊத்துக்காடு, கட்டவாக்கம், தென்னேரி, மஞ்சமேடு, அய்மிச்சேரி, குண்ணம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்தோர், தினமும் சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், இச்சாலையை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில், தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இரவு, பகலாக வேலைக்கு சென்று வருகின்றனர். இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில், இரவு நேரங்களில் சென்று வரும்போது, சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத இச்சாலை பகுதிகளில், மர்மநபர்கள் சுற்றி திரிவதால், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.எனவே, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், இரவு நேரங்களில் போக்குவரத்து ரோந்து வாகனம் அமைத்து, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை