மேலும் செய்திகள்
கல் குவாரியில் விதிமீறல் கவுன்சிலருக்கு கம்பி
19-Dec-2025
சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு
18-Dec-2025
தாயை தாக்கிய தம்பியை கொலை செய்தவர் கைது
11-Dec-2025
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு
08-Dec-2025
நாகர்கோவில் : கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் 'கவச்' பாதுகாப்பு செயல்படுத்தப்படவுள்ளது.ஒரே பாதையில் வருகின்ற இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்கான அமைப்பு 'கவச்'. தானியங்கி ரயில் பாதுகாப்பு என அழைக்கப்படும் இது 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் 2022 இல் உருவாக்கப்பட்டது.ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்தால் ரயில்களின் பிரேக்கிங் சிஸ்டம் தானாக செயல்பட்டு ரயில்களை இது நிறுத்தி விடும். ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் இது செயல்படும்.இந்த வசதி கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இடையே அமைக்கப்பட்டுள்ள 86.54 கிலோ மீட்டர் ரயில் பாதையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு கிலோமீட்டருக்கு 50 லட்ச ரூபாய் செலவிடப்படுகிறது.
19-Dec-2025
18-Dec-2025
11-Dec-2025
08-Dec-2025