மேலும் செய்திகள்
குமரி கடற்கரை கன்னியம்பலத்தை திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு
19 hour(s) ago
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
குளச்சல் : நைஜிரியா நாட்டில் லாகூஸ் துறைமுகத்தின் 20 கடல் மைல் தூரத்தில் ஆயில் கப்பலில் பிடித்த தீயால் குமரிமாவட்டத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியானார்கள். நியுமும்பாவில் நோகாமரைன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு சொந்தமான ஆயில் கப்பலை சரிசெய்ய குமரிமாவட்டத்தை சேர்ந்த 2ம் நிலை இன்ஜினியர் ராபர்ட்சேவியர்ராஜ் (45) உள்ளிட்ட இந்தியர்கள் கடந்த ஜூலை 12ம்தேதி மும்பையில் இருந்து நைஜிரியாவிற்கு சென்றனர். நைஜீரியாவின் 20கடல் மைல் தூரத்தில் லாகூஸ் துறைமுகம் பகுதியில் நின்றுகொண்டு இருந்த ஆயில் கப்பல் திடீரென தீப்பிடித்துள்ளது. கடந்த4ம்தேதி நைஜீரியா நேரப்படி காலை 10.45 மணியும், இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் குமரி மாவட்டம் மண்டைகாடு புதூர் பகுதியை சேர்ந்த ராபர்ட்சேவியர்ராஜ் (45 என்பவர் உள்ளிட்ட ஐந்து இந்தியர்கள் பலியானார்கள். இச்சம்பவத்தில் காயம் அடைந்த திருநெல்வேலி மாவட்டத்தைசேர்ந்த மாரிமுத்து என்பவர் ராபர்ட்சேவியர்ராஜ் குடும்பத்தினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவம் குறித்து அறிந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும், எம்,பி.,க்கும், மீன்வளத்துறை உதவி இயக்குனருக்கும் ராபர்ட்சேவியர்ராஜ் குடும்பத்தினர் மனு கொடுத்துள்ளனர். பலியான ராபர்ட்சேவியர்ராஜ்க்கு மரியஆல்வின் என்ற மனைவியும், ஆண்டர்சன்சேவியர்ராஜ் என்ண மகனும் உள்ளனர்.
19 hour(s) ago
24-Sep-2025 | 1
20-Sep-2025