உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்

நாகர்கோவில் : பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கேரளாவில் இருந்து பெண்கள் இருமுடி கட்டு ஏந்தி வந்து கடலில் குளித்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.இக்கோயிலில் 2021 ஜூன் 2 ல் கருவறை கூரை திடீரென தீ பிடித்தது எரிந்தது. இதையடுத்து அதே ஆண்டு நவம்பர் 24-ல் ரூ.1.70 கோடியில் திருப்பணிகளை அமைச்சர் சேகர் பாபு துவங்கி வைத்தார். நான்கு ஆண்டுகளாக நடந்த இத்திருப்பணிகள் நிறைவு பெற்று நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று அதிகாலை 4:00 மணி முதல் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடந்தது. காலை 9:00 மணிக்கு புனித நீர் நிரம்பிய கும்ப கலசங்களை பூஜாரிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து கொண்டு கோபுரத்துக்கு சென்றனர். 9:15 மணிக்கு கோபுரத்தில் உள்ள கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன், கலெக்டர் அழகுமீனா, அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், நாகர்கோவில் மேயர் மகேஷ், தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

மகாதேவர் கோயில் கும்பாபிேஷகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் பக்தர்கள் ஓடி சென்று வழிபடும் 12 சிவாலயங்களில் ஒன்றான திருவிதாங்கோடு மகாதேவர் கோயிலிலும் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நாகர்கோவில் கிருஷ்ணன்கோயிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை