உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி /  தொண்டையில் கல் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

 தொண்டையில் கல் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

நாகர்கோவில்: கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தெற்குமூரி பகுதியைச் சேர்ந்தவர் மஹ்ரூப். இவரது மனைவி ருமானா. இவர்களது ஒரு வயது மகன் அஸ்லம் நூஹ். தோட்டத்தில் விளையாடிய அக்குழந்தைக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் குழந்தையின் தொண்டையில் கல் சிக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் கல்லை அகற்றுவதற்கான நடவடிக்கையில் டாக்டர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் குழந்தை இறந்தது. விசாரணையில் தோட்டத்தில் விளையாடிய குழந்தை, கல்லை எடுத்து வாயில் போடுவதை குடும்பத்தினர் கவனிக்க தவறியதால் இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. தொண்டையில் சிக்கிய கல் கடுமையான மூச்சு திணறலை ஏற்படுத்தியதால் குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ