முதலைப்பட்டி அய்யனார் கோவிலில்சித்திரை திருவிழா நடத்த கோரி மனு
முதலைப்பட்டி அய்யனார் கோவிலில்சித்திரை திருவிழா நடத்த கோரி மனுகரூர்:முதலைப்பட்டி அய்யனார் கோவிலில், சித்திரை திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில், கூறியிருப்பதாவது:தோகைமலை அருகில், முதலைப்பட்டி அய்யனார் கோவில் உள்ளது. இங்கு, 25 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை திருவிழா நடந்தது வந்தது. இக்கோவில் அருகில், ஆக்கிரமிப்பு காரணமாக நடந்த அசம்பாவிதத்தால், ஐந்து ஆண்டுகளாக திருவிழா நடக்கவில்லை. தற்போது அமைதியான சூழ்நிலையில், திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஆனால், திருவிழா நடந்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. சித்திரை திருவிழா நடத்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே அய்யனார் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஊர் மக்கள் ஒன்று கூடி நடத்த அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.