கடத்திய ஆற்று மணல் வி.ஏ.ஓ.,க்கள் பறிமுதல்
குளித்தலை:கடத்திய ஆற்று மணல் வி.ஏ.ஓ.,க்கள் பறிமுதல்குளித்தலை பகுதியில், சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவது கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க தாசில்தார் இந்துமதி உத்தரவிட்டார்.அதன்படி குளித்தலை, நங்கவரம், தோகைமலை குறு வட்ட வருவாய் கிராமங்களில் வருவாய் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு வி.ஏ.ஓ.,க்கள் முத்துக்குமார், முனுசாமி, கோபிநாத் மற்றும் கிராம உதவியாளர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். குளித்தலை வைகைநல்லுார் அக்ரஹாரம் பகுதியில், காவிரி ஆற்றில் இருந்து, 200 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.இதையடுத்த, வருவாய்த்துறையினர் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.