உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெல் நாற்றங்கால் உருவாக்கும் பணி தீவிரம்

நெல் நாற்றங்கால் உருவாக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம் பஞ்சாயத்து பகுதியில், வாய்க்கால் நாற்றங்கால் உருவாக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, பிள்ளபாளையம் வழியாக பாசன வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலில் தற்போது தண்ணீர் செல்வதால், விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். மேலும் நெல் சாகுபடிக்கு, நெற் பயிர்கள் நடவு செய்வதற்காக நாற்றங்காலில் உழவு பணிகள் செய்யப்படுகிறது.நாற்றங்காலில் பயிர்கள் வளர்ந்தவுடன், நெற் பயிர்கள் பறிக்கப்பட்டு விளை நிலங்களில் நடவு செய்யப்படுகிறது. மழை பெய்து வருவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை