உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விபத்தில் பெண் பலி

விபத்தில் பெண் பலி

மோகனூர், மோகனூர் அடுத்த லத்துவாடி ஊராட்சி, நல்லைய கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் பழனியம்மாள், 62. இவர் பண்ணை கோழிகளுக்கு ஊசி போடுவதற்கு, நேற்று முன்தினம் காலை சென்றார். பின்பு மோகனுார்--நாமக்கல் சாலையில் உள்ள லத்துவாடி பிரிவு ரோடு அருகே, ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது, மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக பழனியம்மாள் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று அவர் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை