உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வந்தடைந்த அமராவதி அணை நீர்

கரூர் வந்தடைந்த அமராவதி அணை நீர்

கரூர் : அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று அதிகாலை கரூர் அருகே செட்டிப்பாளையம் அணைக்கு வந்த-டைந்தது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, கடந்த, 18 முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்-பட்டுள்ளது. அதிகபட்சமாக வினாடிக்கு, 4,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரத்து குறைவால் வினாடிக்கு, 1,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 875 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை கரூர் அருகே உள்ள, செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வந்-தடைந்தது. அங்கிருந்து ஷட்டர்கள் மூலம் வெளியேறிய தண்ணீர், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி, நேற்று மதியம் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதிக்கு வந்தது. அப்போது, அமராவதி ஆற்றின் புதிய பாலத்தில் பொதுமக்கள் நின்றுகொண்டு, ஆற்றில் தண்ணீர் செல்வதை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ